கருணாசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனு தள்ளுபடி

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான எம்.எல்.ஏ கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #Karunas
கருணாசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனு தள்ளுபடி
Published on

சென்னை:

முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 23-ம் தேதி காலை அவரை கைது செய்தனர். 

3 மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

கருணாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நாளை விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com