

மதுரை:
மதுரை மாவட்டம், மேலக்கால் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 40). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்பு 3-வது மகளும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மனவேதனை அடைந்த முனியாண்டியும், ஈஸ்வரியும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் ஈஸ்வரி பரிதாபமாக இறந்தார். முனியாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.