தற்கொலை
தற்கொலை

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தம்பதி தற்கொலை

கடமலைக்குண்டு அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
Published on

கடமலைக்குண்டு:

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள காமன்கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 55). பஞ்சு வியாபாரி. அவருடைய மனைவி போதுமணி (48). இவர்களுக்கு ஜெயபிரபு என்ற மகனும், ஜெயசீலா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. ஜெயபிரபு கோவையில் வசித்து வருகிறார்.

ஜெயசீலாவின் கணவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவர் தற்போது காமன்கல்லூர் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் ராஜாவின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பிறகு அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. மேலும் ராஜா செய்து வந்த பஞ்சு வியாபாரத்திலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ராஜாவின் மனைவி போதுமணிக்கு கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. எனவே வறுமை மற்றும் நோய் பாதிப்பு காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ராஜா மற்றும் அவரது மனைவி போதுமணி ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

அதன்படி நேற்று காலை போதுமணி அவரது வீட்டின் அருகே உள்ள மலையடிவாரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அதே இடத்தில் உள்ள மரத்தில் ராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணவன், மனைவி 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com