ஆம்பூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்- போலீஸ் நிலையம் முன் உறவினர்கள் அடிதடி

ஆம்பூரில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவத்தால் இரு தரப்பினர் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காதல் ஜோடி
காதல் ஜோடி
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த சோலூர் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சாரதி (வயது 22). இவரது எதிர்வீட்டை சேர்ந்தவர் சங்கர் இவரது மகள் ஷாலினி (20). இருவரும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஷாலினிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள கோவிலில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். நேற்று மாலை பாதுகாப்பு கேட்டு ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இருதரப்பு உறவினர்களும் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

இதனை கண்ட போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com