துடியலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி துடியலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
பிரசாந்த்- கார்த்திகா
பிரசாந்த்- கார்த்திகா
Published on

கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் அருகிலுள்ள ராக்கியபாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் பிரசாந்த் (27). தனியார் பஸ்  கண்டக்டர். இவரும், சிவகிரியை சேர்ந்த மயில்சாமி என்பவரின் மகள் கார்த்திகா(24) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 

இந்த நிலையில் இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கோவையில் உள்ள ஒரு கோவில் முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்டவர்கள் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருதரப்பு பெற்றோரின் அழைத்துப் பேசி சமரசம் செய்து வைத்து மணமக்களை அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com