வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் எம்.பி.ஏ. பட்டதாரி பெண் தனது காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார்.
வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
Published on

வேலூர்:

வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் எம்.பி.ஏ. பட்டதாரி பெண் தனது காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார். அவர் எஸ்.பி.யிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது பெயர் சரண்யா (வயது 23). எம்.பி.ஏ.பட்டதாரி. நான் திருப்பத்தூரில் பெற்றோருடன் வசித்து வந்தேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த கவுதம் (25). என்பவரை காதலித்தேன். எனது காதல் வீட்டிற்கு தெரியவந்தது. எனது பெற்றோர்கள் காதலை ஏற்கவில்லை.

இதனால் கடந்த வருடம் வீட்டிற்கு தெரியாமல் இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டேன். பின்னர் திருமணத்தை பதிவு செய்து கொண்டு எனது பெற்றோர் வீட்டில் வசித்தேன்.

இந்நிலையில் எனது பெற்றோர் எனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். எனவே நான் வீட்டைவிட்டு வெளியேறி எனது காதல் கணவர் கவுதம் வீட்டிற்கு சென்று விட்டேன்.

தற்போது எனது பெற்றோர்கள் மூலம் எனக்கும், எனது காதல் கணவர் மற்றும், அவரது குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது. எனவே எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com