கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கியது.
கட்டுமான தொழிலாளர்கள்
கட்டுமான தொழிலாளர்கள்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த 27,656 கட்டுமான தொழிலாளர் உள்ளனர். இவர்களில் முதல்கட்டமாக 10 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

திருப்பூர் - மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்)  பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கியது.

கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் பொன்னுசாமி முகாமை தொடங்கி வைத்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ குழுவினர் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். திருப்பூரில் 139 பேர், அவிநாசியில், 65 பேர் என  204 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

தொழிலாளர் கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜகுமார், அமலாக்க பிரிவு கமிஷனர் மலர்க்கொடி பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com