திருவாரூர் அருகே சமையல் செய்த பெண் தீ விபத்தில் பலி

திருவாரூர் அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் பெண் காயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் பரிதாபமாக இறந்தார்.
திருவாரூர் அருகே சமையல் செய்த பெண் தீ விபத்தில் பலி
Published on

திருவாரூர்:

திருவாரூர் அருகே சாமந்தபுரம் பகுதி கொடிக்கால் பாளையத்தை சேர்ந்தவர் முருகையன். இவரது மனைவி முத்தமிழ்ச்செல்வி (வயது 32). இவர்களுக்கு தரணிகா (11), அபிதீஸ்ரீ (12) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் முத்தமிழ்செல்வி சமையல் செய்தபோது அவரது ஆடையில் தீ பற்றி பலத்த தீக்காயம் அடைந்தார். அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்தவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.

இதுகுறித்து முருகையன் வைப்பூர் போலீசில் செய்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com