சாத்தான்குளம் அருகே தீயில் கருகி பெண் பலி

சாத்தான்குளம் அருகே சமையல் செய்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாத்தான்குளம் அருகே தீயில் கருகி பெண் பலி
Published on

சாத்தான்குளம்: 

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மனைவி பாக்கியத்தாய் (வயது95). இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். தனுஷ்கோடி இறந்து விட்டார். இதனால் பாக்கியதாய் மகள் ரத்தினம் பராமரிப்பில் இருந்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று பாக்கியதாய் வீட்டில் சமையல் செய்ய அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பில் தவறி விழுந்தார். இதில் அவரது உடல் முழுவதும் தீப்பிடித்தது. இதில் உடல் கருகி பாக்கிய தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அந்தோணி, சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com