

கோவை:
காரமடை அருகே உள்ள தீரம்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி கலைவாணி (வயது 21). இவர் அந்த பகுதியில் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கலைவாணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதல் கணவரை பிரிந்து 2-வதாக மகேசை திருமணம் செய்து வசித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த கலைவாணி மண்எண்ணை அடுப்பில் உணவு சமைத்துக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக அவரது உடையில் தீ பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கலைவாணியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கலைவாணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரமடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.