ராஜீவ் கொலையில் கைதானவர்கள் விடுவிக்க கோரிய வழக்கு: அடுத்த மாதம் தள்ளிவைப்பு

ராஜீவ் கொலையில் கைதானவர்கள் விடுவிக்க கோரிய வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
ராஜீவ் கொலையில் கைதானவர்கள் விடுவிக்க கோரிய வழக்கு: அடுத்த மாதம் தள்ளிவைப்பு
Published on

சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், தங்களை சிறையில் இருந்து விடுவிக்கக்கோரி கடந்த 2012-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று இந்த வழக்கு நீதிபதி ராஜீவ் சக்தேர் தலைமையிலான டிவிஷன் பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைதொடர்ந்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம்(நவம்பர்) 7-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com