தொடர் மழை எதிரொலி: சிறுமலையில் எலுமிச்சை விளைச்சல் அமோகம்

தொடர் மழை காரணமாக சிறுமலையில் எலுமிச்சை விளைச்சல் அதிகரித்துள்ளது.
தொடர் மழை எதிரொலி: சிறுமலையில் எலுமிச்சை விளைச்சல் அமோகம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவி வந்தது. இதனால் சிறுமலை பகுதியில் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி விளை நிலங்களுக்குள்புகுந்தது.

சிறுமலையில் எலுமிச்சை அதிக அளவு விளைவிக்கப்பட்டு திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் உள்ள சிறுமலை செட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு கமி‌ஷன் கடைகள் மூலம் பல்வேறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வறட்சியின் காரணமாக கடந்த சில நாட்களாக எலுமிச்சை வரத்து குறைந்தது

மேலும் பழங்களும் செழிப்பு இல்லாமல் இருந்ததால் குறைந்த விலைக்கே விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

தற்போது தொடர் மழை பெய்து வருவதால் எலுமிச்சை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மும்முரமாக எலுமிச்சைகளை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு எலுமிச்சை செழிப்பாக வளர்ந்துள்ளது.

இந்த மழை தொடர்ந்து பெய்தால் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும். அதிக அளவு விளைச்சல் உள்ளதால் விவசாயிகள் ஆர்வமுடன் எலுமிச்சை விளைவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com