கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

பழங்குடியினர் மக்களின் நலனை பேணுவதற்காக கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடந்தது.
கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.
கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.
Published on

ராணிப்பேட்டை:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனை பேணுவதற்காக மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் ச.திவ்யதர்ஷினி தலைமை தாங்கி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் பேணும் அறிவுரைகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, கூடுதல் ஆட்சியர் ச.உமா, ராணிப்பேட்டை உதவி கலெக்டர் க.இளம்பகவத், வருவாய் கோட்ட அலுவலர் (அரக்கோணம்) பேபி இந்திரா, ஆதிதிராவிட நல அலுவலர் தே.இளவரசி, எம்.எல்.ஏ.க்கள் ஆர்.காந்தி, ஈஸ்வரப்பன், மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலம் விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், ம.கருணாமூர்த்தி, கே.அன்பழகன், ராமன், தினகரன மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com