ரத்தினகிரி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி மரணம்

ரத்தினகிரி அருகே மாடியில் இருந்து பேசி கொண்டிருந்த கட்டிட தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஆற்காடு:

ரத்தினகிரியை அடுத்த நந்தியாலம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவர் 23-ந்தேதி இரவு வீட்டின் மாடியில் உள்ள கைப்பிடி சுவர் மீது அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக திடீரெனத் தவறி கீழே விழுந்தார். 

அதில் பலத்த காயம் அடைந்த அவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com