முன்னிலை பெற்றது கன்சர்வேட்டிவ் கட்சி: தெரசா மே-க்கு மெஜாரிட்டி கிடைக்குமா?

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர் கட்சியை விட கணிசமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னிலை பெற்றது கன்சர்வேட்டிவ் கட்சி: தெரசா மே-க்கு மெஜாரிட்டி கிடைக்குமா?
Published on

லண்டன்:

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 650 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், 4.6 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தொடக்கத்தில்  ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை விட தொழிலாளர் கட்சி முன்னிலை வகித்து வந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவடைய உள்ள நிலையில், தற்போது கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 

இதுவரை சுமார் 600 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கன்சர்வேட்டிவ் கட்சி 289 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 247 இடங்களை பிடித்துள்ளது. இதில் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.  

மெஜாரிட்டி பெறுவதற்கு 326 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் 

600 தொகுதிகளின் வெற்றி நிலவரம்:-

கன்சர்வேட்டிவ் கட்சி                     - 289

தொழிலாளர் கட்சி                        -  247

ஸ்காட்லாந்து தேசியவாத கட்சி            - 34

லிபரல் ஜனநாயக கட்சி                   - 10

ஜனநாயக ஒற்றுமைவாத கட்சி            - 10

மற்றவை                                -  11

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com