

சென்னை:
சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக தென் சென்னை மாவட்ட காங்கிரசார் மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் அடையாறில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக செல்ல முடிவு செய்தனர்.
ஆனால் பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி பேரணியாக புறப்பட்ட கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.
ரஞ்சன்குமார், நாச்சிக்குளம் சரவணன், திருவான்மியூர் மனோகரன், மலர்கொடி, சாந்தி, ஆதிநாராயணன், முத்தமிழ், சுசீலா கோபாலகிருஷ்ணன், விருகை ராமச்சந்திரன், மன்சூர் அலி, கிருஷ்ணமூர்த்தி உள்பட காங்கிரசார் கைதானார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கஸ்தூரிபாய் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.