டெல்லி - ராகுல்காந்தி தலைமையில் காங். கட்சியின் புதிய வழிகாட்டும் குழுவின் முதல் கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட புதிய வழிகாட்டி குழுவின் முதல் கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது.
டெல்லி - ராகுல்காந்தி தலைமையில் காங். கட்சியின் புதிய வழிகாட்டும் குழுவின் முதல் கூட்டம்
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் மத்திய செயற்குழுவை (காரிய கமிட்டி) கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலைத்து, 34 உறுப்பினர்களை கொண்ட புதிய வழிகாட்டி குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

புதிய வழிகாட்டி குழுவில் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, அகமது படேல், திக்விஜய் சிங், குலாம்நபி ஆசாத், அம்பிகா சோனி, அசோக் கெலாட், சுஷில்குமார் ஷிண்டே, ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஆனந்த் சர்மா, கமல்நாத், மல்லிகார்ஜுன கார்கே, சி.பி.ஜோஷி, பி.கே.ஹரி பிரசாத், மோதிலால் வோரா, ரன்தீப் சிங் சுர்ஜிவாலா உள்பட பல தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே காரிய கமிட்டியில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட புதிய வழிகாட்டி குழுவின் முதல் கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அகில இந்திய மாநாட்டுக்கான தேதிகள் குறித்தும், அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்க உள்ள பாராளுமன்ற கூட்டம் குறித்தும், அகில இந்திய மாநாடு நடத்ததுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com