

சேலம்:
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரியும் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஆக்ஸ்போர்டு ராமநாதன், எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, பச்சப்பட்டி பழனி, மோகன், பெரியசாமி, ராமன், சிவக்குமார், சாந்தமூர்த்தி, வரதராஜன், லைன்குமரேசன் உள்ளட பலர் கலந்து கொண்டனர்.