கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா மகன் ஜெயிஷாவின் ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

கோவில்பட்டி:

பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா மகன் ஜெயிஷாவின் ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் சண்முகராஜ், கயத்தாறு வட்டாரத் தலைவர் செல்லத்துரை, மாவட்டத் துணைத் தலைவர் திருப்பதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மகன் ஜெயிஷாவின் ஊழலைக் கண்டித்தும், பா.ஜ.க.வின் ஊழல், பொருளாதார சீர்கேட்டைக் கண்டித்தும் கோ‌ஷமிட்டனர்.

பின்னர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். சிறுபான்மையினரை பாதிக்காத வகையில் பா.ஜ.க. அரசு செயல்பட வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷமிட்டனர்.

இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்புராயலு, உமாசங்கர், பிரேம்குமார், சவரிஆனந்தம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கேசவன், தங்கபுஷ்பம், மாரியம்மாள், தேவசகாயம், புஷ்பராஜ், பங்காருசாமி, முத்து, அமலதாசன், ராஜேந்திரன், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com