அறந்தாங்கியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அனைவருக்கும் பயிர் இழப்பீட்டு தொகை வழங்க கோரி அறந்தாங்கியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அறந்தாங்கியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

அறந்தாங்கி:

அனைவருக்கும் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்க கோரி அறந்தாங்கி தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு அறந்தாங்கி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் டாக்டர் செல்வேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அர்ச்சுணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் தர்ம தங்கவேல் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அறந்தாங்கி தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அரவிந்தன், அறந்தாங்கி ஒன்றிய பொதுச் செயலாளர் கார்த்திக், அறந்தாங்கி நகரத்  தலைவர் வீராச்சாமி, வட்டாரத்  தலைவர்கள் நிலையூர் சரவணன், கூடலூர் முத்து, விஸ்வநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ்காந்தி, மாவட்டச் செயலாளர் பெரியசாமி, நிர்வாகிகள் குணசேகரன், முத்து சிவகிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை கல்வி கடனுக்காக வரவு வைப்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com