ஒட்டன்சத்திரம் அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ஆடுகள் திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் 9 ஆடுகள் திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காங்கிரஸ்
காங்கிரஸ்
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே நாகணம்பட்டியை சேர்ந்தவர் ராமராசு. காங்கிரஸ் பிரமுகரான இவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார். வீட்டி அருகே தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார். மேலும் ஆடுகளையும் வளர்த்து வருகிறார்.

சம்பவத்தன்று தனது ஆடுகளை கிடையில் அடைத்து வைத்திருந்தார். நள்ளிரவு சமயம் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 9 ஆடுகளை திருடிச் சென்றனர். மறுநாள் காலையில் பார்த்தபோது ஆடுகள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் அதிக அளவில் திருடு போனது. குறிப்பாக மார்க்கெட் பகுதியிலும், மெயின்ரோட்டிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை மர்ம கும்பல் நோட்டமிட்டு திருடி சென்றது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட போதிலும் யாரும் பிடிபடவில்லை.

இந்த நிலையில் ஆடுகள் திருடு போனது பொதுமக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com