கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

அரியலூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கியாஸ் விலையுர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
Published on

அரியலூர்:

அரியலூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கியாஸ் விலையுர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கண்டனஆர்ப்பாட்டத்தில், நகர தலைவர் சந்திரசேகர் வரவேற்று பேசினார். 

மாவட்ட வர்த்தக அணி தலைவர் விஜய்ஆண்டனி, மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் கொளஞ்சி, மாவட்ட பொருளாளர் மனோகரன், செய்தி தொடர்பாளர் சிவக்குமார், சேவாதள தலைவர் சிவா, மகிளா காங்கிரஸ் சகுந்தலா, மகாலட்சுமி, வட்டார தலைவர் தியாகராஜன், கர்ணன், திருநாவுக்கரசு, நகரதுணை தலைவர் செந்தில் உட்பட கீழப்பழுர் செல்வகுமார், ஜெயங்கொண்டம் சங்கர் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர் களும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com