குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு- தக்கலையில் காங்கிரசார் உண்ணாவிரதம்

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், அதை கைவிட கோரியும் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
காங்கிரஸ்
காங்கிரஸ்
Published on

தக்கலை:

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், அதை கைவிட கோரியும் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார், குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com