இலங்கை அரசின் மீன்பிடி மசோதாவை கண்டித்து 30-ந்தேதி காங். ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசின் மீன்பிடி மசோதாவை கண்டித்து 30-ந்தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் மீன்பிடி மசோதாவை கண்டித்து 30-ந்தேதி காங். ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிற இலங்கை சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அப்படி கொடுக்கத் தவறினால் தமிழகத்தில் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறேன். தமிழக மீனவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிற வகையில் இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவை கண்டித்தும், இலங்கை அரசு அம்மசோதாவை திரும்பப் பெற மத்திய மாநில அரசுகள் வற்புறுத்த வேண்டுமெனக் கோரியும், ஏற்கனவே இலங்கை அரசு பிடித்து வைத்திருக்கிற 170க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை திரும்ப ஒப்படைக்க வற்புறுத்தியும், சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரியும் வருகிற 30-ம் தேதி காலை 11 மணிக்கு காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் சென்னையிலும், பிற கடலோர மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு கூறியுள்ளார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com