கிருமாம்பாக்கம் அருகே சவஊர்வலத்தில் மோதல்: டிரைவருக்கு கத்திக்குத்து

கிருமாம்பாக்கம் அருகே சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
கிருமாம்பாக்கம் அருகே சவஊர்வலத்தில் மோதல்: டிரைவருக்கு கத்திக்குத்து
Published on

பாகூர்:

கிருமாம்பாக்கம் அருகே சார்க்காசிமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது29), தனியார் பஸ் டிரைவர். நேற்று அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் முனிசாமி இறந்து போனார். அவரது சவ ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. அப்போது ஆனந்தராஜ் தரப்பினரும், அதே பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் சிலம்பரசன் (29) தரப்பினரும் ஆட்டம் போட்டு சென்றனர்.

அப்போது இருதரப்பினருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. பின்னர் இதுமோதலாக மாறியது. இருதரப்பினரும் தடி மற்றும் கல்லால் தாக்கி கொண்டனர். மேலும் சிலம்பரசன் தரப்பினர் கத்தியால் ஆனந்தராஜை குத்தினர். இதேபோல் சிலம்பரசனை ஆனந்தராஜ் தரப்பினர் தடியால் தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர்கள்2 பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் சிலம்பரசன், விஜி, சவுந்தரராஜன், சரவணன் உள்ளிட்ட 10 பேர் மீதும், சிலம்பரசன் கொடுத்த புகாரின் பேரில் ஆனந்தராஜ் கனகராஜ், அழகர் உள்ளிட்ட 10 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com