திருமங்கலத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவிக்கு கத்திக்குத்து- அரசு பஸ் டிரைவர் கைது

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் குத்திய அரசு பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவிக்கு கத்திக்குத்து- அரசு பஸ் டிரைவர் கைது
Published on

பேரையூர்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயவீரபாண்டி (வயது37), அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி கயல்விழி (28). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கயல்விழியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி ஜெயவீரபாண்டி தகராறு செய்து வந்தார். நேற்றும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெய வீரபாண்டி கத்தியால் கயல் விழியை குத்தினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து கயல்விழி கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயவீரபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com