திறப்பு விழா நடந்தும் பயன்பாட்டுக்கு வராத சமுதாய நலக்கூடம்

குன்னத்தூர் அருகே 16 வேலம்பாளையம் ஊராட்சி கருக்குபாளையம் ரோடு மத்தம்மா கோவில் அருகே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.
சமுதாய நலக்கூடம்
சமுதாய நலக்கூடம்
Published on

குன்னத்தூர் அருகே 16 வேலம்பாளையம் ஊராட்சி கருக்குபாளையம் ரோடு மத்தம்மா கோவில் அருகே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் திருமணம், திருமண வரவேற்பு, சீர் வைபவங்கள் செய்ய மண்டபம் ஏதும் இல்லை என்ற கோரிக்கையை இப்பகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் வைத்தார்கள். உடனே திருப்பூர் மாவட்ட கலெக்டர் தனது நிதியிலிருந்து ரூ.16 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட உத்தரவிட்டார். சமுதாய நலக்கூடம் கட்டி முடித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திறப்புவிழா நடைபெற்றது. ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராததால் இப்பகுதி மதுப்பிரியர்கள் இரவில் அமர்ந்து மதுக்குடிக்கும் திறந்த வெளி பாராக மாறிவிட்டது.

மேலும் காலி பாட்டில்களை உடைத்து போட்டு விட்டுச்சென்று விடுகிறார்கள். ஆகவே வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதற்குள் சமுதாய நலக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டுமாய் இப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com