முகநூலில் ஆட்சேபனைக்குரிய கருத்தால் மேற்கு வங்காளத்தில் மதக்கலவரம்: துணை ராணுவம் விரைந்தது

மேற்கு வங்காளத்தில் முகநூலில் ஹோலி தொடர்பான பக்கத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து வெளியானதால் மதக்கலவரம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகநூலில் ஆட்சேபனைக்குரிய கருத்தால் மேற்கு வங்காளத்தில் மதக்கலவரம்: துணை ராணுவம் விரைந்தது
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் படுரியா என்ற பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. முகநூலில் ஹோலி தொடர்பான பக்கத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து ஒன்று வெளியானதால் இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஆங்காங்கே தீவைப்பு சம்பவங்களும், மோதல்களும் ஏற்பட்டன.

கலவரத்தை கட்டுப்படுத்த மாநில போலீசாருக்கு உதவியாக மத்தியில் இருந்து 3 கம்பெனி துணை ராணுவம் (300 வீரர்கள்) மேற்குவங்காளத்துக்கு அனுப்பப்பட்டது. அம்மாநிலத்தின் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியா, மேற்குவங்காள போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். எனவே இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com