காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பல்லிகல்-ஜோஸ்னா சின்னப்பா ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் தீபிகா பல்லிகல்-ஜோஸ்னா சின்னப்பா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. #CommonWealthGames2018 #CWG2018 #CWGSquash #JoshnaChinappa #DipikaPallikal
காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பல்லிகல்-ஜோஸ்னா சின்னப்பா ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம்
Published on

கோல்ட் கோஸ்ட்:

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 11-வது நாளாக ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர்.  

கடைசி நாளான இன்று ஸ்குவாஷ் இறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல்-ஜோஸ்னா சின்னப்பா ஜோடி, நியூசிலாந்தின் ஜோயல் கிங், அமாண்டா லேண்டர்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில் நியூசிலாந்து ஜோடி 11-9, 11-8 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இதனால் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

இதன்மூமல் இந்தியா 26 தங்கம், 19 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. #CWG2018 #CWGSquash #JoshnaChinappa #DipikaPallikal

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com