டேபிள் டென்னிஸ்- பெண்கள் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. #CWG2018 #GC2018
டேபிள் டென்னிஸ்- பெண்கள் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் அணிக்கான டேபிள் டென்னிஸ் காலிறு ஆட்டங்கள் நடைபெற்றன. 4-வது காலிறுதியில் இந்தியா - மலேசியா அணிகள் மோதின. இதில் இந்தியா 3-0 என எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

முதல் சுற்றில் மணிகா பத்ரா மலேசியாவின் யிங் ஹோவை எதிர்கொண்டார். இதில் மணிகா பத்ரா 11-9, 11-7, 11-7 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது சுற்றில் மதுரிகா பத்கர் கரேன் லினேவை எதிர்கொண்டார். இதில் மதுரிகா 7-11, 11-9, 11-9, 11-3 என வெற்றி பெற்றார்.

3-வது சுற்றில் மவுமா தாஸ் - மதுரிகா பத்கர் ஜோடி, ஐ ஜின் டீ - யிங் யோ ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 11-8, 12-10, 11-8, 11-7 என வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-0 என வெற்றி பெற்று இந்திய பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com