உயர் கல்வி ஆணையம் அமைக்க கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு

இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்க தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உயர் கல்வி ஆணையம் அமைக்க கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு
Published on

திருச்சி:

பல்கலைக்கழக மானிய குழுவை கலைத்துவிட்டு உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பினை ஏற்படுத்துவதற்கான சட்டவரைவினை எதிர்த்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் சார்பில் கருத்தரங்கு திருச்சியில் நடந்தது.

கருத்தரங்கிற்கு சங்கத்தின் முன்னாள் மாநில பொது செயலாளர் திருச்செல்வம் தலைமை தாங்கிபேசினார். அவர் பேசுகையில், ‘’பல்கலைக்கழக மானிய குழு 100 சதவீதம் நிதி வழங்குகின்ற அமைப்பாகவும், ஜனநாயகத்துடன் கல்வியாளர்களை கொண்டு செயல்பட்ட அமைப்பாகும்.

தற்போது மத்திய அரசு இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி உயர்கல்வியின் மாண்பை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் உயர்கல்வியை அரசியல் ஆக்கும் முயற்சி நடைபெறுவதுடன் உயர்கல்வியின் உதவித்தொகை குறைக்கப்படுவதும் தனியார் மயமாக்கும் முயற்சியும், கல்வியை வணிக மயமாக்குதலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகும் அவலம் உள்ளது’’ என்றார்.

கருத்தரங்கில் உயர்கல்வி ஆணையத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com