மதுரையில் கல்லூரி மாணவிகள் மாயம்- போலீசார் விசாரணை

மதுரையில் கல்லூரி மாணவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிகள் மாயம்
மாணவிகள் மாயம்
Published on

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் காத்தம்மாள் தேவி (வயது 19). அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த இவர், சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை.

இது குறித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்.

மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் லிங்கம். இவரது மகள் கமலி (21). ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். பதட்டமடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் வாலாந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com