தஞ்சையில் கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்

கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் மாணவிகளை தேடி வருகிறார்கள்.
தஞ்சையில் கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் லாசர். இவரது மகள் ஜெசிபிரித்தா (வயது 23). எம்.பி.ஏ பட்டதாரி. நேற்று இவர் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லாசர் பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 

இதுகுறித்து லாசர் வல்லம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். 

இதேபோல் தஞ்சை பாப்பா நகரைச் சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மகள் பவித்ரா (21). தஞ்சையிலுள்ள தனியார் கல்லூரியில் எம்.காம் படித்து வருகிறார். நேற்று இவர் தோழியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர்கள் கல்லூரி மற்றும் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. 

இதனால் ராஜப்பா தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com