பல்லடம் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

காதலித்து வாலிபர் ஏமாற்றியதால் பல்லடம் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி பிருந்தா.
தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி பிருந்தா.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் குங்கும பாளையத்தை சேர்ந்தவர் பிருந்தா (வயது 19). இவர் பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் காதலித்து வந்தனர்.

திடீரென காதலன் பேச மறுத்து விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிருந்தா மீண்டும் காதலனுடன் பேச முயன்றார். ஆனால் அவர் வேறு ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் விரக்தியடைந்த பிருந்தா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ குளித்தார்.

தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. வேதனை தாங்கமுடியாமல் பிருந்தா அலறி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பிருந்தாவின் உடல் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். உயிருக்கு போராடிய பிருந்தாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது போலீசில் பிருந்தா மரண வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும் சந்தோஷ் என்ற வாலிபரும் உயிருக்கு உயிராக காதலித்தோம். ஆனால் சிறிது நாட்களாக அவர் என்னிடம் பேசுவதை குறைத்துக்கொண்டார். அதன்பின்னர் என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். காதலித்து ஏமாற்றியதால் விரக்தியடைந்த நான் தீ குளித்தேன் என்று கூறினார். இதனை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் இன்று காலை பிருந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com