ஏர்வாடி அருகே கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

ஏர்வாடி அருகே தாய் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

களக்காடு:

ஏர்வாடி அருகே உள்ள டோனாவூரை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மகன் ஜேம்ஸ் (வயது 17). இவர் வடக்கன்குளத்தில் உள்ள தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஜேம்ஸ் கல்லூரிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அவரது தாயார் ஜெயசீலி கண்டித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜேம்ஸ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 இதுகுறித்து ஏர்வாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com