கபிஸ்தலம் அருகே வி‌ஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை

கபிஸ்தலம் அருகே பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடி கீழத் தெருவில் வசிப்பவர் பிரபாகரன். தனியார் சர்க்கரை ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் மணிகண்டன் (வயது 21). இவர் தஞ்சையில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.

கடந்த சில தினங்களாக கல்லூரிக்குச் செல்லாமல் மணிகண்டன் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மணிகண்டன் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து காவிரி ஆற்றங்கரையில் மயங்கி கிடந்தார். உடனடியாக மணிகண்டனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com