

திருப்பூர்:
இந்தியாவில் நடைபெற்று வரும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை கண்டித்தும், அதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கோரியும், பாலியல் குற்றங்களை விசாரிப் பதற்காக தனி நீதிமன்றம் அமைக்க கோரி திருப்பூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. அனுமதியையும் மீறி மாணவர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.