

கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூங்கா நகரை சேர்ந்தவர் சிவக்குமார். கூலித்தொழிலாளி. இவரது மகள் சிவசங்கரி(வயது 19). இவர் கள்ளக்குறிச்சி அருகே தச்சூரில் உள்ள கல்லூரியில் பி.ஏ.இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 19-ந் தேதி மாணவி சிவசங்கரி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.
இதனைத்தொடர்ந்து சின்னசேலம் போலீசில் சிவசங்கரியின் தாயார் சித்ரா புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றார். #tamilnews