பனவடலிசத்திரத்தில் கல்லூரி மாணவி மாயம்

பனவடலிசத்திரத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
பனவடலிசத்திரத்தில் கல்லூரி மாணவி மாயம்
Published on: 

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அடுத்த பனவடலிசத்திரம் அருகே உள்ள ஆயாள்பட்டி தெற்குகாலனியை சேர்ந்தவர் மாடசாமி (45). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் பிரியா. இவர் நெல்லையில் உள்ள கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற பிரியா பின்னர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாடசாமி மகளை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்காததால் அவர் பனவடலிசத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி பிரியாவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com