கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை- தட்டிக்கேட்ட தாயை தாக்கிய வாலிபர் கைது

கோவையில் கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததை தாய் தட்டிக்கேட்டதால் அவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

கோவை:

திருவண்ணாமலையை சேர்ந்தவர் விமல்சேகர் (வயது 30). இவர் கோவை குறிச்சியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் மதுக்கரை சிமெண்ட் பேக்டரியில் உள்ள ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக உள்ளார்.

இந்தநிலையில் விமல்சேகர் கல்லூரி மாணவி ஒருவருக்கு காதல் தொல்லை கொடுத்தார். இது குறித்து மாணவி தனது தாயிடம் கூறினார். இதனையடுத்து மாணவியின் தாய் விமல்சேகரை தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த விமல்சேகர் பெண்ணின் தாயை தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விமல்சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com