மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

மாமல்லபுரத்தில் கடலில் குளித்த கல்லூரி மாணவரை ராட்சத அலை இழுத்து சென்றது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
Published on

மாமல்லபுரம்:

புதுவண்ணாரப்பேட் டையை சேர்ந்தவர் நரேஷ் (21). மயிலாப்பூரில் உள்ள கல்லூரியில் பி.காம். 3-வது  ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாலை அவர்  நண்பர்களுடன் மாமல்லபுரத்துக்கும் சுற்றுலா வந்தார்.  பின்னர் அனைவரும் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலை நரேசை கடலுக்குள் இழுத்து சென்றது. நண்பர்கள் அவரை காப்பற்ற முயன்றும் முடியவில்லை.

தண்ணீரில் நரேஷ் மூழ்கினார். அவரை  நண்பர்கள் தேடிவந்தனர். இந்த நிலையில்  இன்று காலை  நரேசின் உடல் அதே பகுதியில் பிணமாக கரை ஒதுங்கியது. மாமல்லபுரம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com