அழகர்கோவில் அருகே கல்லூரி முதல்வரை தாக்கிய மாணவர் கைது

பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரை தாக்கிய மாணவரை போலீசார் கைது செய்தனர்.
அழகர்கோவில் அருகே கல்லூரி முதல்வரை தாக்கிய மாணவர் கைது
Published on

மதுரை:

மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கிடாரிபட்டியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் முதல்வர் தவமணி.

கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மதுரை திருநகரை சேர்ந்த அஜய் கடந்த 6 மாதங்களாக கல்லூரிக்கு வரவில்லை.

இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு வந்த அஜய் கல்லூரி முதல்வர் அறைக்குள் அத்துமீறி நுழைந்தார். அங்கிருந்து கல்லூரி முதல்வர் தவமணியிடம் தகராறு செய்ததுடன் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து தவமணி மேலவளவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜய்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com