பெரியாறு கால்வாயில் குதித்து கல்லூரி மாணவி-தாய் தற்கொலை

நிலக்கோட்டை அருகே ஆற்றில் பிணமாக மிதந்த பெண்கள் கல்லூரி மாணவி- தாய் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

நிலக்கோட்டை:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மனைவி ருக்மணி, மகள் ஆர்த்தி. தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கோபித்துக்கொண்டு ருக்மணி மற்றும் ஆர்த்தி வீட்டை விட்டு வெளியேறினர்.

எங்கு தேடியும் கிடைக்காததால் வடகரை போலீசில் வெள்ளைச்சாமி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நிலக்கோட்டை அருகே மட்டப்பாறை பாலம் வைகை ஆற்றில் 2 பெண்கள் பிணமாக மிதந்து வந்தனர். சம்பவம் குறித்து அறிந்ததும் விளாம்பட்டி போலீசார் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தியதில் பெரியகுளம் அருகே மாயமான ருக்மணி, ஆர்த்தி ஆகியோர் என்பது தெரிய வந்தது. குடும்ப தகராறு காரணமாக மனஉளைச்சலில் இருந்த 2 பேரும் ஆண்டிப்பட்டி பெரியாறு பிரதான கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது அவர்கள் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்பத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com