சென்னையில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து கற்பழித்த வாலிபர் கைது

சென்னையில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து கற்பழித்த வாலிபர் கைது
Published on

சென்னை:

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் மோனி. இவருக்கு பாரிமுனையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்பெண்ணை மோனி காதல் வலையில் வீழ்த்தினார். பின்னர் பெரியமேட்டில் உள்ள லாட்ஜுக்கு அழைத்து சென்று திருமண ஆசைவார்த்தை கூறி கற்பழித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த மாணவியை ஆபாசமாக படம் எடுத்த மோனி அதனை காட்டி மிரட்டி, தனது நண்பர் ரவீந்தர்சர்மாவுடனும் மாணவியை உல்லாசமாக இருக்க செய்துள்ளார். பின்னர் 2 பேரும் சேர்ந்து மாணவியை மிரட்டி ரூ.1½ லட்சம் பணத்தையும் பறித்துள்ளனர்.

இதன் பின்னரும் தொடர்ந்து மாணவியை மிரட்டி வந்துள்ளனர். கூடுதலாக பணம் கேட்டும் தொந்தரவு செய்துள்ளனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வேப்பேரி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். ரவீந்தர்சர்மா கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய மோனியை போலீசார் தேடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவியை நேரில் அழைத்தும் போலீசார் வாக்குமூலம் வாங்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com