ஆவுடையார்கோவிலில் கல்லூரி தேர்வில் தோல்வியடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை

ஆவுடையார்கோவில் அருகே கல்லூரி தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆவுடையார்கோவிலில் கல்லூரி தேர்வில் தோல்வியடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை
Published on

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அம்பாள்புரத்தை  சேர்ந்தவர் பழனிவேலு மகள் துர்கா (வயது 22). இவர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் பாடத்தில் படித்து கடந்த சில மாதங்களுக்கு முடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து துர்காவின் செல்போனுக்கு தேர்வு முடிவு வந்துள்ளது. இதில் துர்கா தேர்வில் தோல்வி அடைந்ததாக முடிவு வந்துள்ளது.

இதைப்பார்த்து விரக்தி அடைந்த துர்கா நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு    மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் அவர் மேல்சிகிச் சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகிறார்.  

தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com