மார்த்தாண்டம் அருகே கல்லூரி பஸ் மோதி இளம்பெண் பலி

மார்த்தாண்டம் அருகே மொபட் மீது கல்லூரி பஸ் மோதிய விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

குழித்துறை:

கருங்கல்லையடுத்த தெருவுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் வெர்ஜின்(வயது25). வெர்ஜின் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தையல் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இதற்காக இன்று காலை பயிற்சி மையத்திற்கு மொபட்டில் புறப்பட்டார். வெர்ஜினுடன் அவரது தோழி அபியும்(20) இருந்தார். இருவரும் மொபட்டில் மார்த்தாண்டம் நோக்கிச் சென்றனர்.

மார்த்தாண்டத்தை அடுத்த சிராயன்குழி அருகே சென்ற போது எதிரே ஒரு தனியார் கல்லூரி பஸ் வந்தது. எதிர்பாராத விதமாக பஸ் மொபட் மீது மோதியது. இதில் வெர்ஜினும், அபியும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். வழியில் வெர்ஜின் பரிதாபமாக இறந்தார். அபி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com