

மத்தூர்:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இருந்து இன்று காலை 7 மணியளவில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, மத்தூர் போன்ற சுற்றுவட்டார பகுதியில் மாணவர்களை அழைத்து செல்ல பஸ் ஒன்று வந்தது.
மத்தூரில் மாணவர்களை பஸ்சில் ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு சென்றது. பஸ்சை அரூர் ஈச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது மத்தூர் அருகே சிவம்பட்டியை அடுத்த மஞ்சப்பட்டி கூட்ரோடு பகுதியில் அரசு பள்ளியில் பயிலும் சில மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
பஸ் வேகமாக வந்ததால் எதிரே வந்த மாணவர்கள் மீது மோதமல் இருக்க டிரைவர் வண்டியை திருப்பி உள்ளார். இதில் பஸ் கட்டுபாட்டை இழந்து அருகே இருந்து சுவற்றின் மீது ஏறி நின்றது.
இந்த விபத்தில் பஸ் இருந்த கோனோரிபட்டியைச் சேர்ந்த வினோத் (19), முத்தம்பட்டியைச் சேர்ந்த இளவழகன், பழந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பூவிழி (18), குறிசிலபட்டு பகுதியைச் சேர்ந்த கவுசல்யா, பேராசிரியர்கள் யாகூப்பாட்ஷா, பிரதீப் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே காயம் அடைந்த மாணவர்களை மீட்டு மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விபத்தில் யாகூப்பாட்ஷாவுக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவரை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். பலத்த காயம் அடைந்த பிரதீப்பை கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.