சேலம் மாவட்டத்தில் 8-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் ரோகிணி தகவல்

சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற 8-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 8-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் ரோகிணி தகவல்
Published on

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற 8-ந்தேதி (புதன்கிழமை) அன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலர்கள் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த மாதம் 8-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com