எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு

எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிறுபாசன ஏரி தூர்வாரும் பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
சிறுபாசன ஏரி தூர்வாரும் பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
Published on

எலச்சிபாளையம்:

எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் கொன்னையார் ஊராட்சி், கோக்கலை ஊராட்சி, புத்தூர் கிழக்கு ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி்த்துறையின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி ரூ.5 லட்சம் மதிப்பில் அணைப்பாளையம் பெரியப்பன்குட்டை சிறுபாசன ஏரி தூர்வாரி ஆழப்படுத்துதல், கரை பலப்படுத்துதல் பணியையும், கவுண்டங்குட்டை சிறுபாசன ஏரி தூர்வாரி ஆழப்படுத்துதல், கரை பலப்படுத்துதல் பணியையும், புத்தூர் கிழக்கு குளம் சிறுபாசன ஏரி தூர்வாரி ஆழப்படுத்துதல், கரை பலப்படுத்துதல் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

மேலும் ஏரியினை பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரி ஆழப்படுத்தி எடுக்கப்பட்ட மண்ணை டிராக்டர் மூலம் ஏரி கரைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், விஜயகுமார் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், வரகூரம்பட்டி ஊராட்சியில் ரூ.13.9 லட்சம் மதிப்பில் நாச்சிபாளையம் கவுண்டிபாளையம் முதல் நரிக்கல்காடு வரை தார்சாலை மேம்பாடு செய்யப்பட்டு வரும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஓ.ராஜபாளையம் ஊராட்சியில் ரூ.2.19 லட்சம் மதிப்பில் கோழிகால்நத்தம் பகுதியில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டு நீருற்றி பராமரிக்கப்பட்டு வரும் பணி, கருமாபுரம் ஊராட்சியில் ரூ.2.78 லட்சத்தில் பாதாம், கொடுக்காபுளி, நாவல், வேப்ப, அரச மற்றும் மா உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

ரூ.15 ஆயிரம் மதிப்பில் கலையரசி என்பவர் நிலத்தில் தீவன வளர்ப்பு தொட்டி அமைத்து அசோலா தீவனம் வளர்க்கும் பணி, அணிமூர் ஊராட்சியில் திருச்்செங்கோடு நகராட்சி்யின் உரக்கிடங்கில் எந்திரங்கள் மூலம் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கும் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமால் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com