சுதந்திர தின விழாவில் 114 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி- கலெக்டர் லதா வழங்கினார்

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற 72-வது ஆண்டு சுதந்திர தின விழாவில் கலெக்டர் லதா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து 114 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். #IndependenceDayIndia
சுதந்திர தின விழாவில் 114 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி- கலெக்டர் லதா வழங்கினார்
Published on

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற 72-வது ஆண்டு சுதந்திர தின விழாவில் கலெக்டர் லதா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து  114 பயனாளிகளுக்கு ரூ. 27.12  லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர்  காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

இந்த விழாவில் சிவகங்கை  ஆக்ஸ்போர்டு மெட் ரிக்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நா.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மானா மதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ சுப்பையா அம்பலம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. 

பின்னர் பங்கு பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி பாராட்டுச் சான்றுகளை கலெக்டர் லதா வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், தேவ கோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜீத்,  சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். #IndependenceDayIndia 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com